Thursday, October 20, 2011

சென்னையில் நான்....


மொட்டை மாடியில் விடியர் காலையில், முருகன் கோவில் மணி ......


'The Hindu' வின் செய்திகள் மற்றும் Metro Plus.......

அம்மா தரும் பில்ட்டர் காபி .....

ரேடியோ மிர்ச்சி RJக்களின் விடிகாலை வெட்டி மொக்கை :p.....

அதில் வரும் சூப்பர் சூப்பரான 1980s இளையராஜா பாடல்கள்....(முக்கியமா 'நீங்க நான் ராஜா சார்' நிகழ்ச்சி...)

எனது scootyயில் விர்ர்ரென்று பறக்கும் பொழுது உணரும் பறவை போன்ற அந்த சுதந்திரம்.....

கல்லூரி நண்பர்களுடன் Coffee worldடிலும் Qwikysசிலும் மற்ற பல பல coffee shopகளிலும்  பொழுது கழிக்கும் தருணங்கள்....... 

நான் வாழ்ந்த வளர்ந்த இடங்களையும் தெருக்களையும் கடைகளையும் வாஞ்சையுடன் சென்று பார்க்கும் ஆவல்....

கபாலீஸ்வரரையும் பார்த்தசாரதியையும் சென்று வணங்கி அருகிலுள்ள உலகே மெச்சும் Marina கடற்கரையில் காலாற செல்லும் வேளைகள்....

விடிய விடிய அம்மாவுடனும் தங்கையுடனும் அடிக்கும் அரட்டை கச்சேரி...... 

விமானத்திலிருந்து இறங்கியது முதல் திரும்பி போகின்ற அந்த நொடி வரை என் சொந்த ஊர் காற்றை சுவாசத்தில் உள்ளேந்தி தேக்கி வைக்க எண்ணும் என் உள்ளம்....
.....
.....
......
......
.......இவை அத்தனையும் கொஞ்சம் கொஞ்சமாகவும் திடமாகவும் எனக்கு நினைவுப்படுத்தின, ......என் வாழ்வில் நான் எதை சாதிக்க எதை இழக்கிறேன் என்று......!